Sale!

Solaimalai Ilavarasi

(10 customer reviews)

$8.00

Solaimalai Ilavarasi is a classical tamil novel by Kalki R. Krishnamurthy. It’s a very good written heart breaking love story during the reign of British in India. An excellent novel with two timelines, both has love and patriotism. The characters are depicted nicely with their past lives.

Description

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும்.

ஒரு சராசரி மனிதன் நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் இடையில் அடிக்கடி சென்று வரும் பயணமே இக்கதையின் கரு. பூர்வ ஜென்ம ஞாபகங்களை கருவாகக் கொண்ட எண்ணற்ற கதைகளை நாம் இக்காலத்தில் படித்து இருக்கலாம். ஆனால் அக்காலத்திலேயே அதனைக் கருவாகக் கொண்டு கதையை அமைத்த வெகு சில எழுத்தாளர்களில் கல்கியும் ஒருவர். அது மட்டும் அல்ல உண்மையான காதலர்கள் இறந்தாலும் காதல் சாவதில்லை அது ஜென்ம, ஜென்மமாய் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.

காதல் என்பது வெறும் ஆர்மோன்களின் விளையாட்டு என்று பேசித் திரியும் விந்தை மனிதர்கள் கூட இந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்த பின் அதனை ஆத்மாவின் ராகம் என்று உணருவார்கள். ஆக அவசியம் அனைவரும் படித்துப் பாருங்கள் கல்கியின் பெருமை மட்டும் அல்ல காதலின் பெருமையும் கூட உங்களுக்கே புரியும்.

இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.

Additional information

Author Name

Kalki R. Krishnamurthy

Year

1940

Chapters

20

Main Characters

Veera Ramalinga Kuloththunga Ruththira Thevar (Solai Malai Maharajah), Maanikkavalli (Solai Malai Ilavarasi), Yuva Maharajah Ulaganatha Sundara Paandiyan (Maranenthal Ilavarasan), Kumaralingam (Patriot), Ponnammal, Maniyakkarar

Format

.mp3

Bit Rate

320 kbps

Time Length

5 Hours, 36 Minutes, 27 Seconds

Vocal By

Selvarajah Vijithakumar

10 reviews for Solaimalai Ilavarasi

  1. Prashanth J

    It’s a very good written heart breaking love story during the reign of British in India. Very nice imagination from Kalki that combining the story of Kumaralingam with a history of a Kingdom.

  2. Rithika Saravanan

    An excellent novel with two timelines, both has love and patriotism. The characters are depicted nicely with their past lives.

  3. Lingeshwaran Pathmanathan

    I would have been satisfied if the ending is success of love. But because it is other way around it has got deep place to feel that painful feeling in my heart. Moreover at the end he mentioned like it was true story, I couldn’t bear it on me. So nicely expressed. Hats off.

  4. Niyah T

    A short novel from Kalki but he never fall short to entertain me with his imaginations. The opening lines show the hero treading along a railway track when I expected him to gallop in a horse on the banks of a river. I was expecting a history based novel and my disappointment turned into an amazement when Kalki portrayed the hero in two timelines. Another Kalki entertainer and I thoroughly enjoyed reading it.

  5. Sudharshan

    கனவு உலகத்தையும் நிஜ உலகத்தையும் இணைத்து சிறப்பான காதல் கதை. முடிவு நல்லதாக இருந்திருக்கலாம் என ஏக்கம் கொள்ள வைத்த காதல் கதை(கதை சொல்லும் பாணி). அமரர் கல்கியின் எழுத்தை முதன்முறையாக வாசிக்கிறேன். அவருடைய எழுத்துகளை அதிகம் படிக்கச் சொல்லுகிறது இந்தப் புத்தகம்.

  6. Dineshsanth

    கனவில் நடக்கும் விடயங்களையும் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களையும் இணைத்து அந்தக் காலத்திலே கல்கி எழுதியமை உண்மையில் பிரமிக்க வைக்கின்றது.முடிவை மாற்றியிருக்கலாம்.

  7. M Kamesh

    அநதகாலததில இபபடி ஒரு dual story

  8. Arun A

    கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வரலாறு தழுவிய புதினங்களை படித்த அனுபவத்திலிருந்து, அலை ஓசை எனும் புதினத்தை வாங்கியிருக்கிறேன், அதே நேரம் இந்த சோலைமலை இளவரசி சிறுகதை புத்தகம் படிக்க ஆசை ஏற்பட்டது, அதற்கு இன்னோர் காரணமும் உண்டு. இதே நேரத்தில் தான் நான் விக்ரமனின் நந்திபுரத்து நாயகி படித்து கொண்டிருந்தேன். அதில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவாக அதை பாதியில் நிறுத்திவிட்டு மாறுதலாக இந்த குறுங்கதை படித்தேன்.

    மிகவும் எளிமையாக முன்னோர் காலத்தில் நடந்த கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டு தற்காலக்கதையை நகர்த்துகிறார். இதில் ஒரே ஒரு இடத்தில மட்டும் அதாவது ஒரே போன்ற நிகழ்வுகள் மற்றும் உரையாடல்கள் வரும்பொழுது நம்மால் எளிதில் யூகிப்பது கல்கியின் புத்தகத்திற்கான கணத்தை குறைகிறது. அதே போல கதையின் முடிவு மனதின் கணத்தை கூட்டுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதி காலத்தில் சுதந்திரத்துக்காக போராடும் குமாரசாமியில் ஆரம்பித்து, அதே கும்பெனியாரின் ஆதிக்கம் ஆரம்பிக்கும் காலத்தில் மாறனேந்தல் மாகாணத்தில் அங்கிருந்த மன்னர்களிடம் எப்படி அவர்கள் நட்பு கொண்டு அதிகாரத்தை பிடித்தனர் என்பதையும் இடையில் ஓர் இளவரசனின் கதையையும் அதே நிகழ்வுகளை குமாரசாமியின் தற்கால நிகழ்வுகளோடு பிணைத்து கதையை எழுதியுள்ளார். மொத்தத்தில் மிகவும் ரசித்த படிக்கச் செய்யும் கதை என்பதில் மாற்றமில்லை.

  9. Hamid Shah

    A short novel from Kalki but he never fall short to entertain you with his imaginations. The opening lines show the hero treading along a railway track when I expected him to gallop in a horse on the banks of a river. I was expecting a history based novel and my disappointment turned into an amazement when Kalki portrayed the hero in two timelines. Another Kalki entertainer and I thoroughly enjoyed reading it.

  10. Laksmanan Perumal (verified owner)

    Good narration by current and century before event , you feel like be there in solaimalai, last part somewhat not as good previously

    Love it.. nice to read two events coincidences kalki always best at his narration and characterization. Ponnammal and manickavalli in your heart till at end.. also very well characterised kumaralingan and marNenthal raja..

Add a review